கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் பெறுவது தொடர்பான கட்டண பட்டியல்
கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் பெறுவது தொடர்பான கட்டண பட்டியல்
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி பகுதியில் கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் பெறுவது தொடர்பான கட்டண பட்டியல் பதாகை வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பதாகை
அரசின் நலத்திட்டங்கள் பெறுவது தொடர்பானது முதல் அனைத்து சான்றுகளும் கிராம நிர்வாக அதிகாரியிடம் பெற்ற பின்பே விண்ணப்பிக்க முடியும். இதனால் தினந்தோறும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சான்றிதழ் தொடர்பாக பொதுமக்கள் செல்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி பகுதியில் கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் பெறுவது தொடர்பான கட்டண பட்டியல் ஒன்றை பாதாகையாக பொதுமக்கள் வைத்துள்ளனர்.
அதுவும் முக்கிய அறிவிப்பு என்று அந்த பாதாகையின் தலைப்பில் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு, அதற்கு கீழ் மணியக்கார அம்மாவிடம்சென்று யாரும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பின்னர் விலைபட்டியல் என்று பட்டியலிட்டு அதில்
பட்டா சிட்டா1 சென்ட் முதல் ஒரு ஏக்கர் ரூ.5000 அதற்கு மேல் அவசரத்திற்கு ஏற்ப தொகை உயர்த்தப்படும். இறப்பு சான்றிதழ் இறந்த உடன் பதிவு செய்தால் மினிமம் ரூ.2000. அடங்கல் ரூ.1000., வாரிசு சான்றிதழ் ரூ.5000., 10 முதல் 40 வருட காலம் ஆகி விட்டால் வருடத்திற்கு ரூ.2000.சாதி சான்றிதழ் ரூ.1000.
பரபரப்பு
ரூ.72 ஆயிரம் என வருமான சான்றிதழ் பெற ரூ.3000. திருமண பதிவு சான்றிதழ் ரூ.3000. இடம் அளந்து கொடுக்க ஒரு சென்ட் முதல் 1 ஏக்கர் ரூ.10 ஆயிரம். அதற்கு மேல் இருந்தால் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம். இருப்பிடசான்றிதழ் ரூ.1000, விதவை சான்றிதழ் ரூ.4000, கணவரால் கைவிப்பட்டவர் சான்றிதழ் ரூ.4000. பிறப்பிட சான்றிதழ் ரூ.1000. எப்.எம்.பி. இடத்தின் வரைபடம் ரூ.1000
இந்த தொகையை கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும். மீறி ஏதாவது கேட்டால் உங்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும்.இவ்வாறு அந்த பதாகையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த பதாகை வைத்துள்ள பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் ஒரு நிமிடம் நின்று அந்த பாதாகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்களை படித்த பின்னரே அங்கிருந்து செல்கிறார்கள். இந்த பதாகையால் அந்த பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
--------------------
Related Tags :
Next Story