வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஊட்டி
அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 3 பேரூராட்சிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
மீதமுள்ள 291 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. 4 நகராட்சிகளில் 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 8-ந் தேதி 2-வது கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக 491 வாக்குப்பதிவு எந்திரங்கள், 491 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டது.
3-வது கட்டமாக ஒதுக்கீடு
இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 3-வது கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்களை மின்னணு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் காந்திராஜ் தலைமையில் நடந்தது. இந்த ஒதுக்கீட்டில் நகராட்சியில் 99 வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்ற விவரம் தெரிந்தது.
மேலும் வாக்குப்பதிவு எந்திர எண், கட்டுப்பாட்டு எந்திர எண், பாக்ஸ் எண் தெரிந்ததோடு, அதன் மூலம் வார்டு மற்றும் வாக்குச்சாவடிகள் வாரியாக பாதுகாப்பு அறையில் உள்ள எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டது. இதற்காக அறையின் சீர் அகற்றி பணி முடிந்த பின்னர் மீண்டும் சீல் வைத்து மூடப்பட்டது. பிற 14 உள்ளாட்சி அமைப்புகளிலும் 3-வது கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
கட்டுப்பாட்டு எந்திரங்கள்
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ஊட்டி நகராட்சிக்கு 99 வாக்குப்பதிவு எந்திரங்கள், குன்னூர் நகராட்சியில் 48, கூடலூர் நகராட்சியில் 53, நெல்லியாளம் நகராட்சியில் 51, அதிகரட்டி பேரூராட்சியில் 21, பிக்கட்டி பேரூராட்சியில் 17, தேவர்சோலை பேரூராட்சியில் 29, உலிக்கல் பேரூராட்சியில் 22, ஜெகதளா பேரூராட்சியில் 18, கேத்தி பேரூராட்சியில் 24, கீழ்குந்தா பேரூராட்சியில் 18, கோத்தகிரி பேரூராட்சியில் 33, நடுவட்டம் பேரூராட்சியில் 18, ஓவேலி பேரூராட்சியில் 22, சோலூர் பேரூராட்சியில் 18 என மொத்தம் 491 வாக்குப்பதிவு, 491 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story