இன்சூரன்சு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


இன்சூரன்சு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2022 7:32 PM IST (Updated: 10 Feb 2022 7:32 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இன்சூரன்சு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பொது இன்சூரன்சு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை பெரைறா தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல பொறுப்பாளர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், முகவர் சங்கம் செந்தாமரைக்கண்ணன், ஓய்வூதியர் சங்கம் கிளைட்டன், ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் நேஷனல் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்சு கிளைகளை மூடுவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் இன்சூரன்சு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story