முக கவசம் அணியாத 138 பேருக்கு அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாத 138 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்து உள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்ற 138 பேருக்கு ரூ.27 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது. அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 9 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 6 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 46 புகையிலைப் பாக்கெட்டுகள் மற்றும் 109 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----
Related Tags :
Next Story