ஓட்டல்அதிபரிடம் ரூ.61 ஆயிரம் பறிமுதல்
கோவில்பட்டியில் பறக்கும் படையினர் ஓட்டல் அதிபரிடம் 61 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்
கோவில்பட்டி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் விளாத்திகுளம் துணை தாசில்தார் அப்பன ராஜ் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை மற்றும் போலீசார் கொண்ட பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது சாத்தூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தார்கள். காரில் இருந்த சாத்தூரை சேர்ந்த ஓட்டல் அதிபர் அபிஷேக்கிடம் (வயது 25) தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.61 ஆயிரத்து 360-யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை கோவில்பட்டி நகரசபை மேலாளர் பெருமாள் மூலமாக, கோவில்பட்டி கிளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story