தியாகராஜசாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய தியாகராஜ சாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:-
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய தியாகராஜ சாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வேதாரண்யேஸ்வரர் கோவில்
வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம். இது போல் பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கடந்த மாதம் (ஜனவரி) 29-ந் ேததி மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தியாகராஜசாமி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அன்னதானம்
இதில் தியாகராஜர் மூலஸ்தானத்தில் இருந்து வசந்த மண்டபத்துக்கு ஹம்ச நடனத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பஞ்சமூர்த்திகள் சகிதமாக சந்திரசேகரசாமி பூத வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா காட்சி நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சந்நிதி, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story