தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர்கள் 27 வார்டுகளில் நேரடி போட்டி


தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர்கள் 27 வார்டுகளில் நேரடி போட்டி
x
தினத்தந்தி 10 Feb 2022 10:09 PM IST (Updated: 10 Feb 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

நாகை நகராட்சியில் தி.மு.க.-அ.தி.மு.க. வேட்பாளர்கள் இடையே 27 வார்டுகளில் நேரடி போட்டி நிலவுகிறது.

வெளிப்பாளையம்:-

நாகை நகராட்சியில் தி.மு.க.-அ.தி.மு.க. வேட்பாளர்கள் இடையே 27 வார்டுகளில் நேரடி போட்டி நிலவுகிறது. 

நாகை நகராட்சி

நாகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 16-வது வார்டில் போட்டியிட சுரேஷ் என்பவர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 35 வார்டுகளுக்கு தேர்தல் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. தி.மு.க. அ.தி.மு.க. மற்றும் அவற்றின் கூட்டணி கட்சிகள், பா.ஜனதா, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் களம் காண்கின்றனர். 
இதில் தி.மு.க-அ.தி.மு.க. இடையே 27 வார்டுகளில் நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த முறை அ.தி.மு.க. நகராட்சி சேர்மன் பதவியை கைப்பற்றியது. இந்த முறை நகராட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று தி.மு.க. முனைப்பு காட்டி வருகிறது. 

தேர்தல் களம் 

அதேபோல் அ.தி.மு.க.வும் நகராட்சியை தக்க வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க போட்டியிடும் ஒரு சில வார்டுகளில் சுயேட்சைகள், மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிட்டாலும் இந்த இரு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி பலமாக இருப்பதாக கூறப்படுகிறது. 
இந்த முறை 27 வார்டுகளில் தி.மு.க.-அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுவதால் நாகை நகராட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Next Story