கோவில்களில் தை கிருத்திகை வழிபாடு


கோவில்களில் தை கிருத்திகை வழிபாடு
x
தினத்தந்தி 10 Feb 2022 10:49 PM IST (Updated: 10 Feb 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் தை கிருத்திகை வழிபாடு

வாய்மேடு:-

நாகை மாவட்டம் வாய்மேடு பழனி ஆண்டவர் கோவிலில் தை கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் பழனி ஆண்டவருக்கு பால், இளநீர், நெய், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் தலைஞாயிறு அருகே உம்பளச்சேரியில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story