வாலிபர் தற்கொலை
குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் பரங்கிரிநாதர் புரம் பகுதியில் வசிப்பவர் ராஜா (வயது 45). சிவாஜி நகர் கோட்டை ரோட்டில் சிமெண்ட் செங்கல் நிறுவனம் வைத்துள்ளார். இவரது நிறுவனத்தில் இவரது சகோதரர் அலெக்ஸ்ராஜா (35) கடந்த 10 வருடங்கள் பணியாற்றி வந்தார். இந்நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான அலெக்ஸ்ராஜா கடந்த 4 நாட்களாக வேலைக்கு வராதநிலையில் குடிக்க போன் மூலம்பணம் கேட்டுள்ளார். ராஜா குடிக்க பணம் தர மறுத்த நிலையில் அலெக்ஸ்ராஜா தான் குடியிருக்கும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி ராஜா கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story