இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட்டையை சேர்ந்த 9 மீனவர்கள் சொந்த ஊர் வந்தனர்
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட்டையை சேர்ந்த 9 மீனவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.
ராமேசுவரம்,
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட்டையை சேர்ந்த 9 மீனவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.
56 மீனவர்கள் கைது
ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்கச் சென்ற 9 படகுகள் மற்றும் 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
அதுபோல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 மீனவர்களும் கடந்த மாதம் 25-ந்தேதி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விமானம் மூலம் அனுப்பி வைப்பதற்கான பணிகள் நடைபெற்ற போது மீனவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அதிகமான மீனவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் அங்கு தனிமையில் தங்கவைக்கப்பட்டனர்.
9 மீனவர்கள் சென்னை வந்தனர்
இந்த நிலையில் மறு கொரோனா பரிசோதனைக்கு பின்னர், 9 மீனவர்கள் மட்டும் இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினர். இதில் 6 பேர் ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள். 3 பேர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்.
அவர்கள் 9 பேரையும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஏற்பாட்டின்படி வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமுள்ள 47 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
---
Related Tags :
Next Story