கால்நடை மருத்துவ முகாம்
கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
நொய்யல்
நொய்யல் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் நொய்யல் கால்நடை மருந்தக மருத்துவர்கள் கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் முகாமில் கலந்துகொண்ட எருமை மாடுகள், பசு மாடுகள், ஆடுகளுக்கு தேவையான சிகிச்சை, சினை பரிசோதனை, குடற்புழு நீக்க மருந்துகளை கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
முகாமில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்று சென்றனர்.
Related Tags :
Next Story