மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 10 Feb 2022 11:53 PM IST (Updated: 10 Feb 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பர்கூர், பிப்.11-
பர்கூர் அருகே அச்சமங்கலத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி நந்தகுமார் (வயது 18). இவரும், திருப்பதி (18) என்பவரும் மோட்டார் சைக்கிளில் அச்சமங்கலம் - மிட்டப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் நந்தகுமார், திருப்பதி, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த பாலகிருஷ்ணன் (23), நரோஜ் (20) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். இதில் நந்தகுமார் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story