கலவை அருகே நடுரோட்டில் இறந்து கிடந்த ஓட்டல் ஊழியர்


கலவை  அருகே நடுரோட்டில் இறந்து கிடந்த ஓட்டல் ஊழியர்
x
தினத்தந்தி 11 Feb 2022 12:07 AM IST (Updated: 11 Feb 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே ஓட்டல் ஊழியர் ஒருவர் நடுரோட்டில் இறந்துகிடந்தார்.

கலவை

கலவையை அடுத்த பென்னகர் கிராமத்தில் உள்ள முனுசாமியின் மகன் விநாயகம் (வயது 37). இவர், விஷாரம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். அவர், நேற்று முன்தினம் மாலை தனது அத்தையை பென்னகர் கிராமத்தில் இருந்து அல்லாளச்சேரி கிராமத்தில் விட்டு விட்டு அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வேம்பி புத்துக்கோவில் அருகே இரவு 7.30 மணியளவில் வரும்போது தலையில் பலத்த அடிபட்டு நடுரோட்டில் இறந்து கிடந்தார். அவர் மோட்டார்சைக்கிள் விபத்தில் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்த விவரம் தெரியவில்லை
இதுகுறித்து தந்தை முனுசாமி கலவை போலீசில் புகார் செய்தார்.

 போலீசார் வழக்குப்பதிவு செய்து, விநாயகம் எப்படி இறந்தார், விபத்தில் பலியானாரா, அவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதிய வாகனம் எது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
சம்பவ இடத்தில் திரண்ட பொன்னகர் கிராம மக்கள், விநாயகத்தின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், எனக் கோஷமிட்டனர். பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர்.

Next Story