தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Feb 2022 12:08 AM IST (Updated: 11 Feb 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

 பழுதடைந்த சாலையால் விபத்து அபாயம்

  வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த வேப்பூரில் குடியாத்தம்-பள்ளிகொண்டா சாலையில் போடப்பட்டுள்ள தார் சாலை பகுதி பகுதியாக பெயர்ந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதன் அடியில் உள்ள பழைய தார் சாலை அதன் மீது போடப்பட்ட புதிய தார்சாலை இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் தனித் தனியாகப் பெயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இரவில் பயணிகள் அவதிக்கு ஆளாகி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.
  -திருவேங்கடநாதன், வேப்பூர்.

மணல் கடத்தல்

  திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு கிராமத்தில் போலீஸ் நிலையத்துக்கு அருகிலேயே பாம்பாறு உள்ளது. மழைக்காலத்தில் பெருக்கெடுத்த வெள்ளம் தற்போது வற்றி வருகிறது. இதனால் பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு வாகனங்களில் மணல் அள்ளி கடத்தும் சம்பவம் நடந்து வருகிறது. மணல் கடத்தலை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறையினரும் நடவடிக்கை எடுப்பார்களா?
  -ப.சண்முகம், குரிலாப்பட்டு.

கூடுதல் பஸ்களை இயக்குவார்களா?

  சென்னையில் இருந்து போளூருக்கு ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பண்டிகை காலம், சுப முகூர்த்த நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போளூருக்கும், சென்னைக்கும் சென்று வர மக்கள் சிரமப்படுகின்றனர். ஒருசிலர் ஆரணி அல்லது வந்தவாசி சென்று அங்கிருந்து சென்னைக்கு பஸ் பிடித்துப்போக வேண்டிய நிலை உள்ளது. எனவே சேத்துப்பட்டு பணிமனையில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்களை இயக்குவார்களா?
  -செல்வம், சேத்துப்பட்டு.

வாகனங்கள் சென்று வர அனுமதி வேண்டும்

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து நியூட்டன் பகுதிக்கு செல்லும் வழியில் ரெயில்வே கேட் உள்ளது. அங்கு மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அந்த வழியாக பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு வைத்துள்ளனர். இதனால் ஆலங்காயம் பகுதிக்கு சென்று வரும் வாகனங்கள் தேவையின்றி பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர நேரிடுகிறது. தடுப்பை அகற்றி விட்டு வாகனங்கள் சென்றுவர அனுமதிக்க வேண்டும்.
  -எம்.ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி.

குழாயில் உடைப்பு

  காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் சாலையில் ஒரு இடத்தில் பள்ளம் ஏற்பட்டு, குழாய் உடைத்து அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் பல வீடுகளுக்கு சரியாக தண்ணீர் கிடைப்பதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய ேவண்டும்.
  -அருண்குமார், வண்டறந்தாங்கல்.

சாலையோரம் கால்வாய் வசதி தேவை

  தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வாணாபுரம் கிராமம். அங்கிருந்து தச்சம்பட்டு செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் பின் பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் ெபருகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அப்பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வருபவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். வாணாபுரம்-தச்சம்பட்டு சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -சிவன், வாணாபுரம்.

 நடைபாதையில் ேதங்கி நிற்கும் கழிவுநீர்

  கே.வி.குப்பம் பஸ்நிலையத்தை அடுத்த கால்நடை மருத்துவமனை அருகில் மேல்மாயில் செல்லும் சாலையையொட்டி நடைபாதை உள்ளது. அதையொட்டி இருக்கும் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் குறுகலாக உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தடைபட்டு நடைபாதை முழுவதும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அங்குள்ள சிறுபாலத்தின் கிழக்குப்பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, தூர்வாராததால் கழிவுநீர் செல்ல வழியில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
  -மாணிக்கம், ேக.வி.குப்பம்.

நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

  திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு போதிய இடவசதி கிடையாது. ஆனால் வேலூர் பஸ்கள் நிறுக்கும் பகுதியில் பயணியர் நிழற்குடையில் வரிசையாக மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு பயணிகள் நிற்க போதிய இடம் இல்லாமல் அவதி அடைகின்றனர். எனவே இது குறித்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ராஜன், திருவண்ணாமலை.

Next Story