கடையநல்லூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
கடையநல்லூர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
கடையநல்லூர்:
கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்ததை கண்டித்து கடையநல்லூர்- மதுரை ரோடு மணிக்கூண்டு திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் செய்யது அலி, மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் ஜலாலுதீன், துணைத்தலைவர் மசூது, துணை செயலாளர்கள், ஹாஜா, பீர்முகமது, அஹ்மது, அன்வர் சாதிக், தொண்டரணி செயலாளர் புகாரி மற்றும் நிர்வாகிகள் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர் மூவர்ண உடை அணிந்தும் தேசிய கொடியை கைகளில் ஏந்தியும் கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story