உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல்


உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Feb 2022 1:31 AM IST (Updated: 11 Feb 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு, அம்மாப்பேட்டை அருகே வாகன சோதனையின்போது உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 200-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவையாறு:
திருவையாறு, அம்மாப்பேட்டை அருகே வாகன சோதனையின்போது உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.3  லட்சத்து 57 ஆயிரத்து 200-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 
வாகன சோதனை 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனை நடந்து வருகிறது. 
நேற்று மாலை கண்டியூர்-திருக்காட்டுப்பள்ளி மெயின் ரோட்டில் காட்டுக்கோட்டை பாதை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா தலைமையில் போலீசார் செந்தில்குமார், விஜயராகவன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் பறிமுதல் 
அப்போது திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கண்டியூர் நோக்கி வந்த ஒரு மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். சோதனையின்போது அந்த மினி லாரியில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் இருந்ததும், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததும் தெரிய வந்தது. 
இதையடுத்து பறக்கும் படை அதிகாரி கீதா அந்த பணத்தை பறிமுதல் செய்து மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதியிடம் ஒப்படைத்தார். அவர் அந்த பணத்தை சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.
ரூ.91 ஆயிரத்து 200 பறிமுதல் 
பாபநாசம் வட்டம் அம்மாப்பேட்டை அருகே பல்லவராயன்பேட்டை சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முரளிதரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாரூரிலிருந்து அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். பின்னர் காரில் வந்த குடவாசல் நேதாஜி நகரை சேர்ந்த ராஜாராம் (வயது 65) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் ரூ.91 ஆயிரத்து 200 இருந்ததும், அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததும் தெரியவந்தது. இ்ந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அம்மாப்பேட்டை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாவிடம் ஒப்படைத்தனர்.

Next Story