பா.ம.க. சார்பில் போட்டியிடும் இஸ்லாமிய சகோதரிகள்


பா.ம.க. சார்பில் போட்டியிடும் இஸ்லாமிய  சகோதரிகள்
x
தினத்தந்தி 11 Feb 2022 1:42 AM IST (Updated: 11 Feb 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

ஆடுதுறை பேரூராட்சியில் பா.ம.க. சார்பில் இஸ்லாமிய சகோதரிகள் போட்டியிடுகின்றனர்.

திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. என மும்முனை போட்டி நிலவுகிறது. ஆடுதுறை பேரூராட்சி 10-வது வார்டிற்கு சமீமாபேகம் பா.ம.க. சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவரது கணவர் சேட்டு என்கிற சாகுல்அமீது. மாற்றுத்திறனாளியான  இவர் ஆடுதுறை பகுதியில் தனது மனைவிக்காக கைகளால் தவழ்ந்து சென்று வீடு, வீடாக  வாக்கு சேகரித்து வருகிறார். சமீமா பேகத்தின் சகோதரி முத்துபீவிசா பா.ம.க. சார்பில் 1-வது வார்டில் போட்டியிடுகிறார். இஸ்லாமிய சகோதரிகள் பா.ம.க. சார்பில் ஆடுதுறையில் களம் காண்கின்றனர்.

Next Story