கட்டிட பணி விரைந்து முடிக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அகரதிருமாளம் ஊராட்சி பூந்தோட்டம் அருகே இயங்கி வரும் அரசு ஆஸ்பத்திரி சேதமடைந்துள்ளது. இந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடம் பாதியிலேயே நிற்கிறது. தற்போது கட்டிடத்தை சுற்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஆஸ்பத்திரி கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் சமூக விரோதிகள் உள்ளே நுழையாதபடி கண்காணிப்பு கேமரா அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், திருவாரூர்.
Related Tags :
Next Story