நடிகர் செந்தில் பிரசாரம்
பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம்
மதுரை
உள்ளாட்சி தேர்தலில் மதுரையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்றுமுன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். இந்தநிலையில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நடிகர் செந்தில் நேற்று காலை மதுரை வந்தார். மதுரை புதூர், கிருஷ்ணாபுரம் காலனி உள்ளிட்ட பல இடங்களில் காலை முதல் மாலை வரை பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ஒரே நேரத்தில் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை வழங்கியவர் மோடி. இன்னும் பல திட்டங்களை மோடி கொண்டு வர இருக்கிறார். அனைத்து இடங்களிலும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story