விக்கிரமசிங்கபுரம்: சுவர் இடிந்து தொழிலாளி பலி
சுவர் இடிந்து தொழிலாளி இறந்தார்
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் ஊராட்சி புலவன்பட்டி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சற்குணம் (வயது 55). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை விக்கிரமசிங்கபுரம் கீழகொட்டாரம் தேவசகாயம் தெருவில் ஒரு வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து இவரின் மேல் விழுந்தது. இதில் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சற்குணம் இறந்தார். இதுபற்றி விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவருக்கு லதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story