குண்டர் சட்டத்தில் மகன் கைது தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


குண்டர் சட்டத்தில் மகன் கைது  தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Feb 2022 7:24 PM IST (Updated: 11 Feb 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் மகன் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள சரத்துப்பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 55). தொழிலாளி. இவரது மகன் ரஞ்சித் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் மனமுடைந்த வைரமுத்து நேற்று முன்தினம் விஷம் குடித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வைரமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story