700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
700 இடங்களில்...
சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கொரோனா நோய்தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி கடந்த செப்டம்பர் மாதம் முதல் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 21 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 6 லட்சத்து 30 ஆயிரத்து 682 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள ஏதுவாக இன்று(சனிக்கிழமை) 22-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 700 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கையிருப்பு
இதில் 86 முகாம்கள் நகராட்சி பகுதிகளிலும் 614 முகாம்கள் ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் அமைக்கபட்டுள்ளது. இம்முகாம்களில் பயனாளிகளுக்கு செலுத்த கோவிஷூல்டு 63 ஆயிரம், கோவாக்சின் தடுப்பூசி 15 ஆயிரம் மருந்துகளும் மொத்தம் 78 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளது. கொரோனா நோய் தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழுமையாக தங்களது முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மருந்துகளை செலுத்திக்கொள்வது அவசியம்.
எனவே இன்று நடைபெறும் 22-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் பொது மக்கள் அனைவரும் தவறாமல் தேவையான ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண், முதலியவற்றுடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளலாம். இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story