கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 7 பவுன் நகை பறிப்பு


கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 7 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 11 Feb 2022 10:20 PM IST (Updated: 11 Feb 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.

திண்டிவனம், 

திண்டிவனம் தீர்த்தகுளம் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அய்யந்தோப்பை சேர்ந்த ஆனந்தன் மனைவி சசிகலா(வயது 32) என்பவரிடம் 3 பவுன் நகை, காவேரிப்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை மனைவி அம்சா(55) என்பவரிடம் 2 பவுன் நகை, கோனங்குப்பத்தை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி வள்ளியம்மை(60) என்பவரிடம் 2 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story