இந்திய கடற்படை ரோந்து கப்பல் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்தது


இந்திய கடற்படை ரோந்து கப்பல்  பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்தது
x
தினத்தந்தி 11 Feb 2022 10:25 PM IST (Updated: 11 Feb 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை 3 கப்பல்கள் கடந்து சென்றன.

ராமேசுவரம், 
பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை 3 கப்பல்கள் கடந்து சென்றன.
ரோந்து கப்பல்
பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல கேரள மாநிலம் கொச்சினில் புதிதாக செய்யப்பட்ட இந்திய கடற் படையின் ரோந்து கப்பல் ஒன்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாம்பன் கடல் பகுதிக்கு வந்து நிறுத்தி வைக்கப் பட்டது. பலத்த சூறாவளி காற்று காரணமாக கப்பலின் நங்கூரம் அறுந்து கப்பலின் அடிப்பகுதியில் உள்ள புரொபல்லர் பழுதானதை தொடர்ந்து அந்த கப்பல் பாம்பன் கடற்கரையில் ஏற்றி நிறுத்தப்பட்டு பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
தொடர்ந்து அந்த கப்பலின் பழுது சரி செய்யப்பட்ட நிலையில் அந்த கப்பல் நேற்று முன்தினம் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய கடற்படையின் ரோந்துகப்பல் கடந்து செல்ல பாம்பன் ரெயில் தூக்குப் பாலம் நேற்று காலை 9 மணி அளவில் திறக்கப்பட்டது. 
கடற்படை முகாம்
அப்போது தென் கடல் பகுதியில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்திய கடற்படையின் ரோந்து கப்பல் தூக்குப்பாலத்தை துறைமுக அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் கடந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை முகாம் நோக்கி சென்றது.
இதேபோல் சென்னையில் இருந்து மாலத்தீவு செல்வதற்காக சொகுசு கப்பல் ஒன்றும் கிருஷ்ணா பட்டினம் பகுதியில் இருந்து கேரளா செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்றும் பாண்டிச்சேரியில் இருந்து மும்பை செல்வதற்காக சிறிய படகு ஒன்றும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றது.

Next Story