மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
திண்டுக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, 5 பேரூராட்சிகளில் மொத்தம் 8 பேர் வார்டு கவுன்சிலர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் 478 பதவிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி 894 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 894 கட்டுப்பாட்டு எந்திரங்கள் வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கப்பட்டன. இதையடுத்து அவை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அவை போலீஸ் பாதுகாப்புடன் தனி அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
சின்னம் பொருத்தும் பணி
இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இதற்காக வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு, எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன. பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்பார்வையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களை பொருத்தும் பணி நடந்தது.
அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளின் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு உள்ளன. அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியில் நேற்று அலுவலர்கள் ஈடுபட்டனர். இதில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் பலர் கலந்து கொண்டனர்.
வாக்குவாதம்
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அங்கு வந்திருந்தனர். அப்போது தங்களுடைய கரும்பு விவசாயி சின்னம், பிற வேட்பாளர்களின் சின்னங்களை விட மிகவும் சிறியதாக இருப்பதாக குற்றம்சாட்டினர். இதனால் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே குற்றச்சாட்டு குறித்து முறையாக புகார் மனு கொடுக்கும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story