கல் குவாரியில் மர்மமாக இறந்து கிடந்த லாரி டிரைவர்
கல் குவாரியில் மர்மமாக இறந்து கிடந்த லாரி டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க. பரமத்தி
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே குப்பம் நொச்சிக்காட்டூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 50). இவர் அங்குள்ள தனியார் கல்குவாரியில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு புஷ்பா (42) என்ற மனைவி உள்ளார். இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு ராமச்சந்திரன் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி புஷ்பா கரூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலை வந்து பார்த்தபோது கணவர் வீட்டில் இல்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். நேற்று காலை சண்முகத்துக்கு சொந்தமான கல் குவாரியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் 80 அடி ஆழமுள்ள கல் குவாரியில் சென்று பார்த்தபோது பலத்த காயத்துடன் பிணமாக ராமச்சந்திரன் கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி புஷ்பாவிற்கு தகவல் கொடுத்தனர். புஷ்பா இதுகுறித்து க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் க.பரமத்தி போலீசார் ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story