அரூரில் கையில் பாம்புடன் வாக்கு சேகரித்த வேட்பாளரின் கணவர்
அரூரில் கையில் பாம்புடன் வேட்பாளரின் கணவர் வாக்கு சேகரித்தார்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி 3-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளராக கீர்த்திகா போட்டியிடுகிறார். இவர் தனது கணவர் கோகுலுடன், அரூர் பஸ் நிலைய பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. இதை பார்த்த கோகுல் அந்த கடைக்குள் புகுந்து பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பை கையில் வைத்துக்கொண்டு தனது மனைவியுடன் சென்று அவர் வாக்கு சேகரித்தார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பாம்பு அரூர் வனப்பகுதியில் விடப்பட்டது.
Related Tags :
Next Story