கள்ளக்குறிச்சி அருகே வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு


கள்ளக்குறிச்சி அருகே வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்  கலெக்டர் ஸ்ரீதர்  ஆய்வு
x
தினத்தந்தி 11 Feb 2022 11:10 PM IST (Updated: 11 Feb 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்







கள்ளக்குறிச்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 
இதைத் தொடர்ந்து 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கலெக்டர் ஆய்வு

அந்த வகையில் கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சியில் பதிவாகும் வாக்குகள் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் பாரதி மகளிர் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்படுகிறது. இதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என பார்வையிட்ட அவர் அங்கு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது நகராட்சி ஆணையர் குமரன், வட்டார தேர்தல் பார்வையாளர் விஜயராகவன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story