சரக்கு ஆட்டோ டிரைவரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறித்த 3 திருநங்கைகள் கைது


சரக்கு ஆட்டோ டிரைவரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறித்த 3 திருநங்கைகள் கைது
x
தினத்தந்தி 11 Feb 2022 11:37 PM IST (Updated: 11 Feb 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் சரக்கு ஆட்டோ டிரைவரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறித்த 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்:
திருச்சி டிரைவர்
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருடைய மகன் வசந்த் (வயது 22). இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். வசந்த கடந்த 7-ந் தேதி நாமக்கல்லில் மணிக்கூண்டு அருகே உள்ள ஒரு மருந்து கடையில் மருந்து வாங்கி கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த திருநங்கைகள் இருவர், உல்லாசமாக இருக்கலாம் என கூறி அவரை ஸ்கூட்டரில் அழைத்து சென்றனர். பின்னர் ஏ.எஸ்.பேட்டை பொய்யேரி ரோட்டில், டிரைவர் வசந்தை கீழே இறக்கி விட்டு, விட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
திருநங்கைகள் கைது
மேலும் வசந்திடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பொய்யேரி ரோட்டில் வசிக்கும் திருநங்கைகளான அர்ச்சனா (29), சேந்தமங்கலத்தை சேர்ந்த லோகேஸ்வரி (26) மற்றும் பவானி என்கிற ரித்திகா (25) ஆகியோர், வசந்தை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் திருநங்கைகளிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story