மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 11 Feb 2022 11:42 PM IST (Updated: 11 Feb 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சீர்காழி, பிப். 12-
சீர்காழி ஈசானிய தெருவில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வடபாதி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில்  மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா காட்சி நடைபெற்றது. நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலை சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கோமள வல்லி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவைக்காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை அடைந்தனர். இரவு கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஏராளமானோர் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில்   சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
---


Next Story