பழுதடைந்த பி ஏ பி கிளை வாய்க்காலால் வீணாகும் தண்ணீர்
உடுமலை அருகே பழுதடைந்த பி.ஏ.பி.கிளை வாய்க்காலால் தண்ணீர் வீணாகி வருகிறது.
உடுமலை
உடுமலை அருகே பழுதடைந்த பி.ஏ.பி.கிளை வாய்க்காலால் தண்ணீர் வீணாகி வருகிறது.
பூலாங்கிணர் கால்வாய்
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தில் (பி.ஏ.பி.) திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் மண்டல பாசனத்திற்கான தண்ணீர் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணர் கால்வாயில் 3-வது சுற்று தண்ணீர்சென்று கொண்டுள்ளது. இந்த தண்ணீர் கிளை வாய்க்கால்கள் மூலம் பாசனபகுதிகளுக்கு சென்று கொண்டுள்ளது. இதன் மூலம் விவசாயப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கான்கிரீட் பெயர்ந்துள்ளது
உடுமலையை அடுத்துள்ள கணபதிபாளையத்தில், வெனசுபட்டி செல்லும் சாலையின் குறுக்கே கிளை வாய்க்கால் செல்கிறது. இதில் சாலையின் இரண்டு புறமும் கிளைவாய்க்காலில் தொட்டி போன்று இருக்கும். கிளைவாய்க்காலில் வரும் தண்ணீர் அந்த தொட்டிபகுதியில் விழுந்து சாலையின் குறுக்கே கீழ்பகுதியில் பதிக்கப்பட்டிருக்கும் குழாய் வழியாக மறுபுறம் செல்லும்.
இதில் அங்கு தொட்டி போன்ற இடத்திற்கு பக்கத்தில் கிளை வாய்க்காலில், கான்கிரீட் கரையின் ஒருபுறம் மேல்பகுதி பழுதடைந்து அதிலிருந்த பெரிய கற்கள் பெயர்ந்துள்ளன. அந்த வழியாக தண்ணீர் வெளியேறி சாலைப்பகுதியிலும், சாலையை ஒட்டியுள்ள பள்ளத்திலும் செல்கிறது. இதனால் பாசனத்திற்கான தண்ணீர் விரயமாகிறது.
அதனால் பி.ஏ.பி. பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிளை வாய்க்காலில் பழுதடைந்த பகுதியை செப்பனிட்டு, தண்ணீர் விரயமாவதைத்தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story