இலங்கை அகதிகள் சாலை மறியல் போராட்டம்


இலங்கை அகதிகள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2022 12:08 AM IST (Updated: 12 Feb 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி இலங்கை அகதிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கேயம்
காங்கேயம் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி இலங்கை அகதிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
காங்கேயம், கரூர் சாலையில் முத்தூர் பிரிவு அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு இலங்கையை சேர்ந்த 80 குடும்பங்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். 
இந்த முகாமில் முறையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. 
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை  நிறைவேற்றக்கோரி கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அதைக்கண்டித்து நேற்று அகதிகள் முகாமைச்சேர்ந்த பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காலை 11.20 மணியளவில் காலிக்குடங்களுடன் கரூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவலறிந்து அங்கு வந்த காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகுடேஸ்வரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகாசலம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சீரான முறையில் குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.
 மேலும்குடிநீர்,கழிவறை அடிப்படை வசதிகள் சம்பந்தமான அனைத்து குறைகளும்,கோரிக்கைகளும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இந்த சாலை மறியல் போராட்டத்தால் காங்கேயம்-கரூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story