ரெயில்வே அதிகாரி மர்ம சாவு


ரெயில்வே அதிகாரி மர்ம சாவு
x
தினத்தந்தி 12 Feb 2022 12:13 AM IST (Updated: 12 Feb 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே அதிகாரி மர்ம சாவு

திருச்சி, பிப்.12-
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). இவர் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே கீழ உத்தரவீதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ராஜேஷ்குமார் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று அவரின் வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தனர்.அங்கு கழிவறையில் ராஜேஷ்குமார் அசைவற்ற நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ்குமார் இறந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பீகாரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Next Story