பெண்ணிடம் மோசடி செய்த ரூ.22 ஆயிரம் மீட்பு
பெண்ணிடம் மோசடி செய்த ரூ.22 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
வேலூர்
வேலூர் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. துணிக்கடை வைத்துள்ளார். இவர் மொத்தமாக துணி வாங்குவதற்கு யூடியுப் பக்கத்தில் தேடினார். அதில்ஒருவர் வெளியிட்டிருந்த விளம்பர வீடியோவை பார்த்துள்ளார். அதை உண்மை என நம்பி முன்பணமாக ரூ.22,247 செலுத்தி துணிகள் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார். பணத்தை செலுத்திய பின்னர் அந்த நபரை அவரால் தொடர்பு கொள்ள இயலவில்லை. அந்த மர்மநபர் மோசடி செய்தது இந்துமதிக்கு தெரியவந்தது.
இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி, இந்துமதி இழந்த 22,247 ரூபாயை மீட்டனர். இதையடுத்து சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி முன்னிலையில் மீட்கப்பட்ட பணம் இந்துமதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story