பஸ்கள் மோதல்; 10 பேர் காயம்


பஸ்கள் மோதல்; 10 பேர் காயம்
x
தினத்தந்தி 12 Feb 2022 12:34 AM IST (Updated: 12 Feb 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். 
10 பேர் காயம் 
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த அரசு பஸ்சும், ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி தனியார் பஸ்சும் வந்து கொண்டு இருந்தது. மடவார் வளாகம் பகுதி அருகே வந்த போது  2 பஸ்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.
ராஜபாளையம் அருகே உள்ள தேவிபட்டினத்தை சேர்ந்த  அனுசியா (வயது50), ஜெயராணி (57), சுபத்ரா (63), ஸ்ரீரங்க ராணி (39), மதன்குமார் (25), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இசக்கியம்மாள் (38), காளீஸ்வரி (35) உள்பட 10 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர். 
போக்குவரத்து பாதிப்பு 
காயமடைந்த அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தினால்  ஸ்ரீவில்லிபுத்தூர் -ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story