அகழ்வாராய்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்


அகழ்வாராய்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்
x
தினத்தந்தி 12 Feb 2022 12:52 AM IST (Updated: 12 Feb 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டையில் அகழ்வாராய்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

தாயில்பட்டி, 
 கீழடி போன்று தமிழர்களின்  வரலாற்று பெருமை தெரிந்து கொள்வதற்காக சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பணிகள் நேற்று தொடங்கியது. வெம்பக்கோட்டை மேட்டுக்காடு என்ற பகுதியில் 5 மீட்டர் அகலமும், 5 மீட்டர் நீளமும் அளவீடு செய்யப்பட்டு 12 குழிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்த பணிகளை அகழ்வாராய்ச்சி இயக்குனர் பாஸ்கர், இணை இயக்குனர் பரத்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

Next Story