மதக்கலவரத்தை தூண்டியதாக 2 பேர் கைது
மதக்கலவரத்தை தூண்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் முஸ்லிம் தெரு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டவாறே தகாத வார்த்தைகளால் பேசி கற்களை எடுத்து வீசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அண்டக்குளம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது பாரூக் உடையாளிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமையாபானு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பரவயலை சேர்ந்த தினேஷ் (வயது 21) மற்றும் அவரது கூட்டாளி பூதலூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) ஆகிய 2 பேர் மீது மதக்கலவரத்தை தூண்டுதல் மற்றும் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story