தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Feb 2022 1:42 AM IST (Updated: 12 Feb 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப பிரச்சினையால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மன்னார்குடி:
மன்னார்குடி அடுத்த தலையாமங்கலம் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் தவசி மகன் பாலசுப்ரமணியன் (வயது35) என்பவருக்கும், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மலர்வேணிகாடு பகுதியை சேர்ந்த வைஷ்ணவி என்பவருக்கும் திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. சிங்கப்பூரில் வேலை செய்து வந்த பாலசுப்ரமணியன் திருமணத்திற்கு பின் சொந்த ஊரிலேயே இருந்து வருகிறார். இந்தநிலையில் வைஷ்ணவிக்கு கடந்த மாதம் வளைகாப்பு நடைபெற்றது. இதையடுத்து பாலசுப்ரமணியன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலசுப்ரமணியன், மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று காலை பாலசுப்ரமணியன் தனது சித்தப்பா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்ரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story