தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Feb 2022 1:57 AM IST (Updated: 12 Feb 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

கழிவுகளை அகற்ற வேண்டும்
திங்கள்சந்தையில் இரணியல் அரசு பள்ளி அருகில் ஒரு கால்வாய் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த கால்வாய் தூர்வாரப்பட்டு அதன் கழிவுகள் அருகில் உள்ள பொதுபாதையில் கொட்டப்பட்டுள்ளது. ஆனால், கழிவுகள் அகற்றப்படாததால் அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுப்பாதையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                        -முத்துகுமார், இரணியல்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியில் சுப்பையார் குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது படித்துறை பகுதியில் சிலர் பன்றிகளை கட்டி வளர்த்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை அப்புறப்படுத்தி குளத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். 
                            -முருகதாஸ், 
கலைநகர்,நாகர்கோவில்.
சுகாதார சீர்கேடு
தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                 -சூர்யா, புதூர்.
அபாய நிலையில் மின்கம்பம்
நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் அணஞ்சபெருமாள் சாலை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து சாலையில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..                           
      -ரமேஷ், பொன்னப்பநாடார் காலனி.
சாலையை சீரமைக்க வேண்டும்
மார்த்தாண்டம் பஸ்நிலையத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
                                   -மு.ஜாண் மோசஸ், விரிகோடு.
 
விபத்து அபாயம்
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து கோர்ட்டுக்கு செல்லும் சாலை உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் வேப்பமூடு சந்திப்பு பகுதி மற்றும் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் அருகில் ஜல்லிகள் ெபயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரம் வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                -பிரவீன் கிஷோர், பாவலர்நகர், நாக்கோவில். 

Next Story