ஈரோட்டில் பரபரப்பு சாக்கடையில் மிதந்து வந்த 500 ரூபாய் நோட்டுகள்
ஈரோட்டில், சாக்கடை கால்வாயில் 500 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
ஈரோட்டில், சாக்கடை கால்வாயில் 500 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
500 ரூபாய் நோட்டுகள்
ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாய்களை மாநகராட்சி 4-ம் மண்டலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் செந்தில், சுந்தர்ராஜ் ஆகியோர் நேற்று காலை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது சாக்கடை கால்வாய் கழிவுநீரில் 500 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்தது.
இதைப்பார்த்து ஆச்சரியம் அடைந்த தூய்மை பணியாளர்கள் சாக்கடை கால்வாய் கழிவு நீரில் மிதந்து வந்த 500 ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். 10-க்கும் மேற்பட்ட 500 ரூபாய் நோட்டுகளை சேகரித்த அவர்கள் பின்னர் அதை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சாக்கடை கால்வாயில் 500 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர், சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சாக்கடை கால்வாயில் மிதந்து வந்த பணம் வாக்காளர்களுக்கு வினியோகிக்க கொண்டு சென்றபோது பறக்கும் படையினரின் கெடுபிடிகள் காரணமாக சாக்கடை கால்வாயில் வீசப்பட்டதா? அல்லது யாருடைய பணமாவது சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்து விட்டதா? என்பது குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story