சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது


சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 12 Feb 2022 2:39 AM IST (Updated: 12 Feb 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அழிசுகுடி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் ரகு(வயது 21). இவர், 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்த நிலையில், தற்போது அந்த சிறுமி கர்ப்பிணியாக உள்ளார். அவர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது, இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் துரைமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது பற்றி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தில் ரகு மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ததோடு, திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story