திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தாயாரின் மண்டையை உடைத்த மகன் கைது


திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தாயாரின் மண்டையை உடைத்த மகன் கைது
x
தினத்தந்தி 12 Feb 2022 3:17 AM IST (Updated: 12 Feb 2022 3:17 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தாயாரின் மண்டையை உடைத்த மகன் கைது செய்யப்பட்டார்.

தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் பூமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி மணி (வயது 57). இவர்களுக்கு சேகர் (36) என்ற மகன் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வீட்டில் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க கூறி வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு தாயார் மணி, மகனிடம் நீ எந்த வேலைக்கும் செல்வது இல்லை, உனக்கு யார் பெண் தருவார்கள்?, ஒழுங்கா வேலைக்கு சென்றால் மட்டுமே திருமணம் செய்துவைக்கமுடியும் என்று கூறிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர் கடந்த 8-ந் தேதி மதியம் வீட்டில் இருந்த தாயார் மணியை, மரக்கட்டையால் தலையில் அடித்து நீ செத்தால் தான் எனக்கு திருமணம் நடக்கும் என்று கூறி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நிலையில் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் மணி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுபற்றி ராஜா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் சேகரை போலீசார் கைது செய்தனர்.

Next Story