நிதி நிறுவனத்தில் ரூ.29 லட்சம் மோசடி; முன்னாள் மேலாளர் மீது வழக்கு
நிதி நிறுவனத்தில் ரூ.29 லட்சம் மோசடி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளரான நாராயண மூர்த்தி, காசிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர், “இதற்கு முன்பு இந்த நிதி நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்த பொன்னுசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேர் சேர்ந்து ஆல்பின் என்பவர் லாக்கரில் வைத்திருந்த 101 பவுன் நகையை அடமானம் வைத்து ரூ.29 லட்சம் கையாடல் செய்துள்ளதாக” கூறி இருந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் லாக்கரில் இருந்த 101 பவுன் நகையை போலி ஆவணங்கள் மூலம் மறு அடகு வைத்து, ரூ.29 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து முன்னாள் மேலாளரான பொன்னுசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 9 பேர் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story