செங்கல்பட்டில் போலீசார் அணிவகுப்பு


செங்கல்பட்டில் போலீசார் அணிவகுப்பு
x
தினத்தந்தி 12 Feb 2022 5:28 PM IST (Updated: 12 Feb 2022 5:28 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

போலீசார் அணிவகுப்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெறவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஸ்பசேரோ தலைமையில் நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தொடங்கி வைத்தார்.

இந்த அணிவகுப்பில் செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீசார் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே புறப்பட்ட போலீசார் அணிவகுப்பு நகரின் முக்கிய சாலைகளான, ஜி.எஸ்.டி. சாலை, பெரிய நத்தம், ஓசூர் அம்மன் கோவில் வழியாக வந்து பதற்றமான வாக்குச்சாவடிகளான வடமலை பள்ளி, வேதப்பர் தெரு, குண்டூர் ராட்டிணகிணறு வழியாக புதிய பஸ் நிலையத்தை சென்றடைந்தது.

மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது.

இடைக்கழிநாடு

இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி வார்டு கவுன்சிலர் பதவி ஏலம் விடப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். தற்போது அங்குள்ள 21 வார்டுகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் இடைக்கழிநாடு பேரூராட்சியில் போலீஸ் அணிவகுப்பு நடத்தினர். இதில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


Next Story