வீடுவீடாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி
வீடுவீடாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தொண்டி,
வீடுவீடாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தேர்தல்
தொண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் 15 வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் அவர்களுக்கு உதவியாக பேரூராட்சியில் பணிபுரிந்து வரும் 15 மஸ்தூர் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி தேர்தல் அலுவலர் ஆகியோரால் முறையான பயிற்சிகள் அளிக்கப் பட்டு பணி நடைபெற்று வருகிறது. 2 நாட்களுக்குள் பேரூராட்சியில் உள்ள 14 ஆயிரத்து 706 வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லியோ ஜெரால்டு எமர்சன் ஆகியோர் தெரிவித்தனர்.
ஆய்வு
மேலும் அவர்கள் கூறுகையில், பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒவ் வொரு வீடு வீடாக சென்று சம்பந்தப்பட்ட வாக்காளர ்களிடம் தான் நேரில் வழங்கவேண்டும் என அறிவுரை வழங்கபட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
பூத் சிலிப் வழங்கும் பணிகளை திருவாடானை தாசில்தார் செந்தில் வேல்முருகன், தேர்தல் பார்வையாளர் செல்வம், தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் லியோ ஜெரால்டு எமர்சன், ஜீவானந்தம், மண்டல தேர்தல் அலுவலர் ரவி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story