தேர்தல் பொருட்களை பிரிக்கும் பணி மும்முரம்


தேர்தல் பொருட்களை பிரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 12 Feb 2022 6:19 PM IST (Updated: 12 Feb 2022 6:19 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் தேர்தல் பொருட்களை வாக்குச்சாவடிகள் வாரியாக பிரிக்கும் பணி மும்முரமாக நடந்தது.

ஊட்டி

ஊட்டியில் தேர்தல் பொருட்களை வாக்குச்சாவடிகள் வாரியாக பிரிக்கும் பணி மும்முரமாக நடந்தது.

பாதுகாப்பு அறை

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 291 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 3 பேரூராட்சிகளில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 3 வாக்குச்சாவடிகள் குறைத்து 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

வாக்குப்பதிவுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டது. அந்த அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. 

தேர்தல் பொருட்கள்

இந்தநிலையில் ஊட்டி நகராட்சியில் வாக்குச்சாவடிகள் வாரியாக தேர்தல் பொருட்களை பிரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. ஆண், பெண் வாக்காளர்களுக்கு தனித்தனியாக தலா 36 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளர்கள் வாக்களிக்க 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.

 நகர்மன்ற கூட்டத்தில் வாக்குச்சாவடி வாரியாக தரை, மேஜையில் எண் குறிக்கப்பட்டது. பின்னர் தேர்தலுக்கு தேவையான பொருட்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட வார்டு வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் விவர குறிப்பேடு, முகவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு, 

தேர்தல் அலுவலர் ஆய்வு

அழியாத மை குப்பிகள், வாக்குப்பதிவு செய்யும் இடம் என உள்ளே, வெளியே போன்ற இடங்களைக் குறிக்கும் குறியீடுகள், பென்சில், குண்டூசிகள், முத்திரை அரக்கு, கித்தான் பை, ஆண், பெண், அனைத்து வாக்காளர்கள் என்பதை குறிக்கும் போஸ்டர்கள், மெழுகுவர்த்திகள், சணல் கயிறு, வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவதற்கான பயிற்சி புத்தகம், மறைவு அட்டை, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பயன்படுத்தும் உறைகள் உள்பட 80 பொருட்கள் பிரித்து வைக்கப்படுகிறது. 

இந்த பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் காந்திராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு நாளன்று தேவைப்படும் பொருட்கள் சரியாக உள்ளதா? என்று உறுதி செய்யப்படுகிறது. மேலும் இல்லாத பொருட்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story