போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை


போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Feb 2022 6:19 PM IST (Updated: 12 Feb 2022 6:19 PM IST)
t-max-icont-min-icon

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோத்தகிரி

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தற்கொலை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ்(வயது 72). தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி 2½ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். 

தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் பெற்று வெளியே வந்தார். போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்றதால் புஷ்பராஜ் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவு 7.30 மணியளவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

விசாரணை

இதுகுறித்து சோலூர்மட்டம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story