வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ராமேசுவரம்,
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
முற்றுகை
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகு களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசை கண்டித்தும் ராமேசுவரத்தில் நேற்றுமுன்தினம் ஏராளமான மீனவர்கள் ரெயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் ராமேசுவரம் ரெயில் நிலையத்தின் முன்பு சட்டவிரோதமாக அனுமதி பெறாமல் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியதாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர்கள் போஸ், சேசுராஜா, எமரிட், சகாயம் ஆகிய 190 மீனவர்கள், 40 பெண்கள் உள்ளிட்ட 255 பேர் மீது நகர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாபஸ்
இதனிடையே கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேசுவரம் மீனவர்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று நேற்று முதல் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றனர்.
ராமேசுவரம் மீன்துறை டோக்கன் அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று நேற்று 557 படகுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை கரை திரும்புவார்கள் என்று கூறப்படுகின்றது.
Related Tags :
Next Story