தேர்தல் பிரசாரத்தில் அனுமதியின்றி வாகனங்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்


தேர்தல் பிரசாரத்தில் அனுமதியின்றி வாகனங்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை:  செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 12 Feb 2022 7:07 PM IST (Updated: 12 Feb 2022 7:07 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சி, நகராட்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரசார பணிகளுக்கு ஒலிபெருக்கிகள் பொருத்திய வாகனங்கள் பயன்படுத்த விரும்பும் வேட்பாளர்கள். அதற்கான அனுமதிகோரி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அறையில் வேட்பாளர் அடையாள அட்டையுடன் மனுக்கள் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் பிரசாரத்தில் அனுமதியின்றி வாகனங்களை பயன்படுத்த கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story