குறி சொல்வதாக பெண்ணிடம் 8 பவுன் நகை திருட்டு


குறி சொல்வதாக பெண்ணிடம் 8 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 12 Feb 2022 9:20 PM IST (Updated: 12 Feb 2022 9:20 PM IST)
t-max-icont-min-icon

குறி சொல்வதாக ஏமாற்றி பெண்ணிடம் 8 பவுன் நகையை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தொண்டி,
குறி சொல்வதாக ஏமாற்றி பெண்ணிடம் 8 பவுன் நகையை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
குறி
திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே உள்ள சம்பூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி இந்திரா (வயது 55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட்டானம் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். 
அங்கு சம்பவ தினத்தன்று இவரும் அவரது உறவினர்கள் சிலரும் அங்கு குறி பார்ப்பதாக சொல்லிவந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரிடம் குறி பார்த்துள்ளனர். குறி சொல்லிய வாலிபர் அங்கிருந்து சென்ற ½ மணி நேரத்தில் இந்திரா கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலி செயின், ஒரு பவுன் செயினை காணவில்லை என்று கூறியுள்ளார். 
அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது குறிசொன்ன வாலிபர் தாலி செயினை கழற்றி கீழே வைக்குமாறு கூறியதாகவும் அவர் தாலி செயினை கழற்றி கீழே வைத்ததாகவும் அதன் பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். 
விசாரணை
இதுகுறித்து இந்திரா எஸ்.பி. பட்டினம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபரை தேடி வருகின்றனர்.

Next Story